கடந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் கைதி படமே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தியவர் அர்ஜூன் தாஸ்.
இளைஞரான இவர் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவராக கைதியில் நடித்திருந்தார். அவன் தலைய கொண்டு வர்றவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்று வில்லத்தனமாக இவர் பேசிய வசனம் புகழ்பெற்றது.
இவர் விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.