விஜய் நடிக்கும் பிகில் படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. இப்படம் குறித்தும் விஜய் குறித்தும் இணைய இதழுக்கு பேட்டியளித்த அர்ச்சனா விஜய் மிகவும் மரியாதையானவர் எல்லோரையும் வா போனு நாம கூப்பிட்டு விடுவோம். அவர் அப்படி இல்லை எல்லோரையும் வாங்க போங்கனுதான் கூப்பிடுவார்.
இந்த படத்தின் ஆடியோ விழாவில் சர்ச்சையாக பேசினார் அப்படி பேசி படத்துக்கு விளம்பரம் தேடுவதாக வெளியில் பேசப்படுகிறது. அப்படி பேசித்தான் இந்தப் படம் ஓடணும்னு அவசியமில்லை. படம், மிக சிறப்பாக வந்துருக்கு என கூறியுள்ளார் அர்ச்சனா.
மேலும் ரசிகர்கள் தாக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமளித்துள்ளார். நாங்க டிக்கெட் எல்லாமே இலவசமாகத்தான் கொடுத்தோம். எந்த ஒரு நிறுவனமும் ஆடியோ லான்ச் டிக்கெட்டை எல்லாம் விற்க மாட்டாங்க. சிலர் நாங்க கொடுத்த டிக்கட்டை டூப்ளிகேட்டா தயார் செய்து வித்துருக்காங்க. அதை ஒரு அளவுக்கு மேல் தடுக்க முடியல. அதனால் போலீஸ் அந்த நடவடிக்கை எடுத்துருக்கு. விஜய் சார் ரசிகர்கள் அடி வாங்கியது, எனக்கு மிக பெரிய மனவருத்தம்தான் என்கிறார் அர்ச்சனா.