அரவிந்த் சாமியின் வித்தியாசமான நடிப்பு

By Staff

Published:

தளபதி படம் மூலம் அறிமுகமான அரவிந்த்சாமி பின்பு மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் அனைவரும் தெரியுமளவு பிரபலமானார். இவர் நடித்திருப்பது பெரும்பாலும் காஸ்ட்லி கேரக்டர்கள்தான்.

af9a681a96fac08fed90ee3bca7feb36

சில வருடங்கள் எந்த படமும் நடிக்காமல் இருந்து ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் நடித்திருந்தார் அதுவும் ஒரு ஹை டெக் வில்லன் கேரக்டர்தான். ஏனென்றால் அரவிந்தசாமியை அணுகுவோர் அவரது லுக்கை பார்த்து நகரத்து கதைக்குத்தான் தேர்வு செய்வர். அதுவும் அல்ட்ரா மாடன் இளைஞனாகவோ, ஹை டெக் இளைஞனாகவோ, பெரிய ஆபிசராகவோதான் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அதை தகர்த்து முதலில் வெளிவந்த அவரது படம் தாலாட்டு. ஹை டெக் இளைஞனாக நடித்த அவரை இந்த படம் கிராமத்து இளைஞனாக அடையாளப்படுத்தியது. அதற்கு பிறகு வந்த படங்களில் இந்திரா என்ற படத்தில் நடித்திருந்தார் அது கிராமத்து கதை என்றாலும் நகரத்து இளைஞன் போலத்தான் அரவிந்த் காட்சியளிப்பார்.

அரவிந்தசாமியின் திரையுலக வாழ்க்கையிலேயே மிக வித்தியாசமான படம் எது என்றால் அவர் நடித்த புதையல் படத்தை சொல்லலாம்.96ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது.

ஹை டெக் இளைஞனான அரவிந்தசாமி கிராமத்து நாயகன் ராமராஜன் போல சிகப்பு சட்டை, பச்சை சட்டை, ரோஸ் சட்டை, ரோஸ் பேண்ட் என அதகளப்படுத்தி இருந்தார் இந்த படத்தில்.

கொரியர் பாயாக தன்னை ஒரு மன்மதனாக தெனாவெட்டாக நினைத்து திரியும் வித்தியாசமான ஜாலியான கேரக்டரை அரவிந்த்சாமி வெளிப்படுத்தி இருந்தார். இந்த ஒரு கேரக்டருக்கு இவரை விட்டால் யாரையும் நம்மால் நினைத்து பார்க்க முடியவில்லை.

இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் செல்வா. கொரியர் பாய் அரவிந்த்சாமிக்கு ஒரு புதையலை பற்றிய ரகசியம் கிடைக்க புதையலை தேடி அவருடன் கவுண்டமணி, செந்தில் போன்றோர் இணைந்து கொள்வதுதான் கதை.

சாதாரண கல கல கதைதான் என்றாலும் அரவிந்தசாமியின் துறு துறு கதாபாத்திரம் பலரையும் கவர்ந்து அந்த நேரத்தில் நன்றாக பேசப்பட்டது.

Leave a Comment