4 நாட்களில் அரண்மனை 4 பண்ண பாக்ஸ் ஆபிஸ் சாதனை!.. கில்லி ரீ ரிலீஸ் வசூலை முந்தியது!.. தரமான சம்பவம்!

By Sarath

Published:

சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் ஆரம்பத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த நிலையில் படம் வெளியான பின்னர் மக்கள் அந்த படத்துக்கு தொடர்ந்து மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

அரண்மனை 4 நான்கு நாள் வசூல்:

மலையாள படங்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களை கவரும் விதமாக தமிழில் படங்கள் வெளியானாலும் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்ப்போம் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு, மஞ்சுமல்பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேசம் போன்ற படங்கள் 100 கோடி வசூலை கடந்துள்ளது. இதில், மஞ்சுமல் பாய்ஸ் மட்டும் 240 கோடி வசூலை அதிகபட்சமாக பெற்றுள்ளது. ஆடுஜீவிதம் மற்றும் ஆவேசம் திரைப்படங்கள் 150 கோடி வசூலை கடந்துள்ளன.

ஆனால் தமிழில் இதுவரை வெளியான ஒரு படம் கூட 100 கோடி வசூலை கூட நெருங்காத நிலையில், அந்த சாதனையை சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி வெளியான அரண்மனை நான்கு திரைப்படம் அதிரடியாக நான்கு நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலை உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கில்லி படம் மறு வெளியீடு செய்யப்பட்டு 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்த நிலையில், அந்த சாதனையை தற்போது சுந்தர் சியின் அரண்மனை 4 திரைப்படம் முறியடித்துள்ளது. கில்லி திரைப்படத்தின் டிக்கெட் விலை பாதிதான் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழ் சினிமா நிலையில் அரண்மனை நான்கு திரைப்படம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வெற்றிப்பாதையை திருப்பி கொடுத்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த வாரம் வெளியாக உள்ள கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக மாறினால், மே மாதத்திலிருந்து தமிழ் சினிமா இரண்டாம் பாதியில் பெரிய வசூல் வெட்டி நடத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் இந்தியன் 2, தளபதி விஜய்யின் கோட், ரஜினிகாந்தின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா, அஜித்குமாரின் விடாமுயற்சி போன்ற பெரிய படங்கள் இந்த ஆண்டு வசூல் சாதனை படைக்கும் என்கின்றனர். மேலும், சிவகார்த்திகேயனின் அமரன். தனுஷின் ராயன், சியான் விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்கள் கணிசமான வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.