சூர்யா 45 படத்திலிருந்து வெளியேறய AR ரஹ்மான்… களமிறங்கும் புதிய இளம் இசையமைப்பாளர்…

By Meena

Published:

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சூர்யா பின்னர் 2000-களின் ஆரம்ப கட்டத்தில் நந்தா காக்க காக்க பிதாமகன் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து வாரணமாயிரம் சிங்கம் படத் தொடர் சூரரை போற்று ஜெய் பீம் போன்ற கமர்சியல் படங்களில் நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டார் சூர்யா. தற்போது சூர்யா நடிப்பில் கங்குவார் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கங்குவா திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் தோல்வியடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு அடுத்ததாக இயக்குனரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45 வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த சூர்யா 45 திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்று கூறப்பட் நிலையில் இன்று ஏ ஆர் ரகுமான் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகனும் கட்சி சேர பாடல் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக இணைந்திருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.