நமது வேறுபாடுகள் அனைத்தையும் கலைந்து கண்ணுக்கு தெரியாத எதிரிக்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரமிது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கிளினிக்குளில் உள்ள டாக்டர்கள், மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த பயங்கரமான தொற்று நோயை சமாளிக்க தயாராக அவர்கள் இருக்கிறார்கள்.
இது நெகிச்சியாக உள்ளது என ஏ.ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.மத வழிபாட்டுத்தலங்களில் கூடி குழப்பம் ஏற்படுத்த இது நேரமல்ல என்றும் ரஹ்மான் கூறியுள்ளார்.