30 வருடங்களை கடப்போம் என்று நினைத்தோம்… மனைவி சாய்ரா பானு உடனான பிரிவு குறித்து மனம் திறந்த AR ரஹ்மான்…

By Meena

Published:

தற்போது இணையம் சினிமா வட்டாரங்கள் என்று பலரும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் AR ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து தான். இதை முதலாவதாக அறிவித்தது AR ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு அவர்கள் தான் அறிக்கையை வெளியிட்டு இருந்தார். தனது கணவருடான 29 வருட திருமண பந்தத்தில் இருந்து முறித்துக் கொள்வதாக கூறியிருந்தார்.

தனுஷ் அடுத்ததாக ஜிவி பிரகாஷ் பின்பு ஜெயம் ரவி தற்போது AR ரஹ்மான் என தமிழ் திரையுலகமே இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது. AR ரஹ்மான் புகழின் உச்சியில் இருப்பவர். அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. அதேபோல் எல்லாவிடத்திலும் AR ரஹ்மான் தனது குடும்பத்தை விட்டுக் கொடுத்து பேசியதே இல்லை.

AR ரஹ்மானின் குடும்ப வாழ்க்கை சார்ந்த தகவல்களோ புகைப்படங்களோ பெரிதாக வெளிய வராத நிலையில் எப்பொழுதுமே தனது மனைவி உறுதுணையாக இருப்பவர் எனது குடும்பம் அன்பான குடும்பம் என்பது போல தான் ஒவ்வொரு நேர்காணலிலும் AR ரஹ்மான் கூறுவார்.

முதலாவதாக சாய்ரா பானு இந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு AR ரஹ்மான் ட்விட்டரில் பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால், 29 வருடத்தை திருமண பந்தத்தை நாங்கள் முடித்து விட்டோம். 30 வருடத்தையும் வெற்றிகரமாக முடித்து விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் ஒரு சில நேரத்தில் நினைப்பது நடப்பது இல்லை. அன்புக்குரியவர்களின் மனம் வேதனைப்படும்போது கடவுளின் சிம்மாசனம் கூட கக்கும் என்று நினைக்கிறேன். இந்த கஷ்டமான நேரத்தில் அன்பளித்தவர்களுக்கும் எங்களது தனிமைக்கு மதிப்பளித்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் நன்றி என்று கூறி பதிவிட்டு இருக்கிறார் AR ரஹ்மான்.