பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூபாய் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் 11 பாடல்களை கம்போஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பொன்னியின் செல்வன் குறித்த சில ஸ்டில்களை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் பகிர்ந்துள்ளார்
அந்த ஸ்டில்களை பார்த்ததும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆச்சரியம் அடைந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்டில்கள் விரைவில் ரசிகர்களுக்கும் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது