அனிருத்துக்கு தில்லு தான்.. நல்லா மியூசிக் பண்றீங்க, ஆனா இதயும் பாத்துகோங்க.. ரஹ்மான் வைத்த அன்பான வேண்டுகோள்..

AR Rahman and Anirudh : ஏ. ஆர். ரஹ்மான் கடந்த 32 ஆண்டுகளாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் நிறைய மொழிகளில் இசையமைத்து வருகிறார். அதில் தேசிய விருது, கிராமிய விருது,…

Rahman Advice to Anirudh

AR Rahman and Anirudh : ஏ. ஆர். ரஹ்மான் கடந்த 32 ஆண்டுகளாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் நிறைய மொழிகளில் இசையமைத்து வருகிறார். அதில் தேசிய விருது, கிராமிய விருது, ஆஸ்கர் விருது, ஃபிலிம்பேர் விருது என அவர் வென்ற விருதுகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம். அப்படிப்பட்ட ஒரு இசை ஜாம்பவான் இன்னும் தனது பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்து வரும் சூழலில் அடுத்ததாக அவரது இசையில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முக்கோண காதல் கதையை சுற்றி படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதும் காதலிக்க நேரமில்லை ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது. இதனிடையே, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடந்தது.

பேன்பாய் மொமெண்ட்

அப்போது படக்குழுவினர் கலந்து கொள்ள இவர்களுடன் மிஸ்கின், அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்தது கொண்டனர். இளம் வயதிலேயே முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகனான அனிருத், காதலிக்க நேரமில்லை படத்தின் நிகழ்ச்சி மேடையிலும் அவரை பற்றி பல ஃபேன்பாய் தருணங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இதன் பின்னர் பேசியிருந்த ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் இந்த காலத்தில் நிறைய பெரிய படங்களுக்கு இசையமைத்து வருவதை பாராட்டி ஒரு கோரிக்கையையும் வைத்திருந்தார். “அனிருத் இப்போது சிறப்பாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் நிறைய பெரிய படங்களுக்கும் இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். இன்று பத்தாயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதில் தனியாக நிலைத்து நிற்கிறார் என்றால் திறமை இல்லாமல் வேறு எதுவும் கிடையாது. அதை நான் பாராட்டியே ஆக வேண்டும்.

அனிருத்திற்கு .ஆர். ரஹ்மான் கோரிக்கை

அப்படியெல்லாம் செய்துவிட்டு இங்கே வந்து ‘தலைவன் தலைவன் தான். தொண்டன் தொண்டன் தான்’ என தில்லாக பேசுகிறார் பாருங்கள். அதுக்கு பெரிய மனசு வேண்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ஆனால் அனிருத்திடம் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் எனக்கு உள்ளது. நீங்கள் இன்னும் கிளாசிக்கல் மியூசிக் மற்றும் பாடல்களை நிறைய செய்ய வேண்டும்.

அப்படி பயன்படுத்தும் போது இசைத்துறையில் இன்னும் நீண்ட காலம் நீங்கள் நிறைய சாதிக்கலாம். உங்களைப் போன்ற ஒருவர் சாதிக்கும் போது அடுத்து வரும் இசையமைப்பாளர்களும் கிளாசிக்கல் மியூசிக்கை இன்னும் அதிகம் பயன்படுத்தலாம் என நினைப்பார்கள்” என ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.