ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் படம் என்ன‌ என்று தெரியுமா?

By Velmurugan

Published:

இசை என்றாலே இந்தப் பெயர் இல்லாமல் இருக்க முடியாது அந்த பெயர் இசைக் கலைஞர் ஏ ஆர் ரகுமான் தான். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமாவில் ரோஜா படத்திற்கு முன்னதாகவே ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளதாக ஒரு அறிய தகவல் கிடைத்துள்ளது. அந்தப் படம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மலையாளத்தில் நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் சேகர் என்பவரின் மகன் தான் நமது ஏ ஆர் ரகுமான். இவருக்கு வீட்டில் முதலில் வைத்திருந்த பெயர் திலீப். அது மட்டுமல்லாமல் சிறு வயதில் இருந்தே இசை மேல் அதிக ஆர்வம் கொண்டவராகவும், கீபோர்ட் வாசிப்பதில் திறமையானவராகவும் இருந்துள்ளார் திலீப்.

தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையின் மறைவிற்குப்பின் இவருடைய பெயர் ஏ ஆர் ரகுமான் என மாறி தன்னுடைய சமயம் சார்ந்த அனைத்திலும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இசை தொடர்பான அனைத்து சின்ன சின்ன வேலைகளையும் ஏ ஆர் ரகுமான் முதலில் செய்து வந்துள்ளார் விளம்பர படங்களுக்கு இசையமைப்பதில் இருந்து கச்சேரிகள் வரை பல இசை நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார்.

அந்த சமயத்தில் தான் இசைஞானி இளையராஜா அவருடன் கீபோர்டு வாசிக்கும் ஒரு வாய்ப்பு ஏ ஆர் ரகுமானுக்கு கிடைத்துள்ளது. இப்படி இவருடைய திரைப்பயணம் தொடர மணிரத்தினம் இயக்கத்தில் ரோஜா திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக திரையுலகில் அடி எடுத்து வைத்தார் ஏ ஆர் ரகுமான்.

இவர் அறிமுகப்படுத்திய வெஸ்டர்ன் மியூசிக் அந்த காலத்தில் இசை ரசிகர்களிடம் ஒரு அதிரடி மாற்றமாக இருந்தது. இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ரோஜா படத்திற்கு முன்னதாக தன்னுடைய இசை பணியை வேறொரு படத்தில் நிறைவேற்றியுள்ளார்.

பி எஸ் வீரப்பா தயாரித்துள்ள ஒரு பழைய படமான வணக்கம் வாத்தியாரே என்ற படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாடல் மட்டும் இல்லாமல் வசனத்தையும் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதியுள்ளார். 

டான்ஸராக சினிமாவில் உழைத்து ஹீரோவாக மாறிய ஐந்து டாப் ஹீரோக்களின் லிஸ்ட்!

இந்த படத்திற்கு முதலில் சம்பத் அவர்கள் இசையமைத்திருந்தார். படப்பிடிப்பின் போது சம்பத் அவர்களுக்கும் தயாரிப்பாளர் வீரப்பா அவருக்கும் இடையில் சிறு ஊடல் ஏற்பட இசையமைப்பாளர் சம்பத் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். மேலும் இந்த படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்று சவாலும் விடுத்துள்ளார். அந்த நேரத்தில் ஏ ஆர் ரகுமான் உதவியுடன் இந்த படத்திற்கான பின்னணி இசை உருவாகியுள்ளது.

ஏ ஆர் ரகுமான் கீ போர்டின் உதவியுடன் எட்டு மணி நேரத்தில் வணக்கம் வாத்தியாரே படத்திற்கான முழு பேக்ரவுண்ட் மியூசிக் போட்டுக் கொடுத்துள்ளார். இந்த தகவலை கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு பேட்டியின் போது பெருமையாக கூறியிருந்தார். இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்திற்கு பின்பு தான் ஏ ஆர் ரகுமான் அவருக்கு மணிரத்தினம் இயக்கத்தில் ரோஜா படத்திற்கான இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று தொடங்கிய ஏ ஆர் ரகுமானின் இசை பயணம் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது என்பது உண்மைதான்.