தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் அனுஷ்கா. அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருடன் கதாநாயகியாக மட்டுமல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.
அருந்ததி என்ற தெலுங்கில் இருந்து டப்பிங் ஆகி தமிழில் வந்த இவரது படம் தாய்மார்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.ராஜா காலத்து கதைகளில் அனுஷ்காவின் நடிப்பு கண்டிப்பாக இருக்கும் பாகுபலி, ருத்ரமா தேவி உள்ளிட்ட படங்கள் இதற்கு சான்று.
பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த அனுஷ்கா கடந்த 2006ம் ஆண்டு தமிழில் ரெண்டு படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் அறிமுகமாகிவிட்டார்.
இவர் நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டதை அவரது ரசிகர் ரசிகைகள் கொண்டாடி வருகின்றனர்.