பிக் பாஸ் 8: அவன் என்ன லவ் பண்றானா?.. அருணிடம் ரகசியமாக கேட்ட அன்ஸிதா..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் மிக அருமையாக இருந்ததுடன் மட்டும் இல்லாமல் இந்த சீசனின் சிறந்த வாரமாகவும் மாறி இருந்தது. பல நாட்கள் கழித்து குடும்பத்தினரை பார்த்த சமயத்தில் அனைவருமே பேச…

Anshitha and arun prasath about Vj Vishal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் மிக அருமையாக இருந்ததுடன் மட்டும் இல்லாமல் இந்த சீசனின் சிறந்த வாரமாகவும் மாறி இருந்தது. பல நாட்கள் கழித்து குடும்பத்தினரை பார்த்த சமயத்தில் அனைவருமே பேச வார்த்தைகள் இல்லாமல் மனமுடைந்து தான் போயினர். இப்படி ஒரு எமோஷனல் மற்றும் ஜாலி நிறைந்த ஒரு சிறந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் முடிந்திருந்த நிலையில் அடுத்த ஒரு பேரதிர்ச்சியாக ஜெஃப்ரியும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார்.

நான்கைந்து நாட்களாக மிகவும் மகிழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இருந்து வந்த சமயத்தில் தான் ஜெஃப்ரி வெளியேறியது அனைவரையும் ஒரு நிமிடம் உடைந்து போக வைத்திருந்தது. பிக் பாஸ் வீட்டில் மிகத் துணிச்சலாக ஆடிய ஜெஃப்ரியும் திடீரென வெளியேறி உள்ளது மற்ற போட்டியாளர்களுக்கும் அதிக பீதியை கொடுத்துள்ளது. விஜய் சேதுபதியும் ஜெஃப்ரிக்கு சில அறிவுரையை வழங்கி அவரை அனுப்பி வைத்திருந்தார்.

அன்ஸிதா போட்ட காதல் வலை

இதனிடையே, ஜெப்ரி எலிமினேட் ஆவதற்கு முன்பாக அருண் பிரசாத் மற்றும் அன்ஸிதா ஆகிய இருவரிடையே நடந்த உரையாடல் அதிக வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் சீரியல் நடிகர் அர்னவ் போட்டியாளராக நுழைந்த சமயத்தில் அன்ஸிதாவுக்கும் அவருக்கும் இடையே முன்பே காதல் இருந்ததாக ரசிகர்கள் பரபரத்துப் போயினர். ஆனால் அனைவரும் எதிர்பார்க்கும் ஆட்டத்தை விளையாடாமல் கொஞ்ச நாளிலேயே அர்னவ் வெளியேற, தற்போது அன்ஸிதா மட்டும் சிறப்பாக ஆடி பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து வருகிறார்.

அப்படி ஒரு சூழலில் அவரும் விஜே விஷாலும், அன்ஸிதாவும் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மிகவும் நட்பு பாராட்டி ஒன்றாகவே பல இடங்களில் இருந்து வருவதும் தெரிகிறது. இந்த நிலையில் தான் அருண் பிரசாத்தை தனியாக அழைத்து அவரது காதில் பேசும் அன்ஸிதா, “விஜே விஷால் என்னை காதலிக்கிறாரா?” என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் அருண் பிரசாத், “எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்றும் கூறுகிறார்.

தீபாவளி மாதிரி கொண்டாடுவேன்..

தொடர்ந்து அன்ஸிதாவிடம், ‘உன் மனதில் என்ன இருக்கிறது?’ என்று அருண் பிரசாத் கேட்க, ஏதேதோ சொல்லி தெரியவில்லை என்று சமாளிக்கவும் செய்கிறார். தொடர்ந்து பேசும் அருண் பிரசாத், இது மட்டும் நடந்தால் நிச்சயம் நான் தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை போல பெரிதாக கொண்டாடுவேன் என்றும் உங்களது வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் நான் இருப்பேன் என்றும் கூறுகிறார்.
Vishal and anshitha

இன்னொரு பக்கம் கேட்கும் அருண் பிரசாத்,வும் இது நடந்தால் நன்றாக இருக்கும் என வெட்கப்படுவதும் அதிக கவனத்தை பெற்று வருகிறது.