தலைவர் 168 படத்தில் ‘அண்ணாத்தே’ பாடல்: ஆச்சரியமளிக்கும் ஒரு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு உள்பட பலர் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘அண்ணாத்தே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…


7c44850a80c5b5ba11517d45776fe333

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு உள்பட பலர் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘அண்ணாத்தே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என தெரிகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் ஓப்பனிங் பாடல் ‘அண்ணாத்தே’ என்று தொடங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், ‘அண்ணாத்தே’ என்ற இந்த வார்த்தை பாடலின் பல இடங்களில் வருவது போல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த பாடலை விவேக் எழுதியிருப்பதாகவும், டி இமான் இந்த பாடலை ரஜினி ரசிகர்களுக்கு என அட்டகாசமாக கம்போஸ் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே அண்ணாமலை, பாட்ஷா பாணியில் இந்த படத்தின் ஓப்பனிங் பாடலும் இருக்கும் என கருதப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன