எந்த செய்தி வந்தாலும் சரி அது எந்த ரூபத்தில் வந்தாலும் சரி அதில் கொரோனா கலப்பு இல்லாமல் இல்லை. அந்த அளவு கொரோனா பற்றிய செய்திகள் உலா வருகிறது.
இதுவும் கொரோனாவை டச் செய்யும் செய்திதான் . கொரோனா வைரஸால் தான் திட்டமிட்டிருந்த பயணம் ஒன்றை பிரபல விஜே அஞ்சனாவின் நண்பர் ரத்து செய்துள்ளார். தான் ஆன்லைனில் தான் செலுத்திய பணத்தை அந்த நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லையாம். பிரபலமான மேக் மை டிரிப் நிறுவனம்தான் அது.
தனது பயணத் தேதியை மாற்றிக்கொள்ள அந்த நிறுவனத்துக்கு ஆயிரம் தடவை அஞ்சனாவின் நண்பர் அழைத்திருப்பாராம். ஆனால் முறையான பதிலில்லை. குறைந்தபட்சம் அதனை கேன்சல் செய்துவிட்டு அவரது பணத்தை திருப்பித்தரலாம்.
கொரோனா உலக அளவில் அச்சுறுத்திக்கொண்டிருக்க தனது இரண்டு வயது குழந்தையுடன் இருக்கும் எனது நண்பருக்கு இது தான் உங்கள் பதிலா ?” என்று கேள்வி எழுப்பி அந்த நிறுவனத்துடனான உரையாடலை ஸ்கிரீன் ஷாட்டாக பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/AnjanaVJ/status/1239617741390151680?s=20