செய்திகளில் வரமாட்டேன்… அனிதா சம்பத் கொடுத்த ஷாக்!!

கொரோனா வைரஸ் தொற்று அனைத்துத் தொழில்களையும் முடக்கி உள்ள நிலையில் மருத்துவத் துறை காவல் துறை, ஊடகத் துறை மட்டுமே வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றது. தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா…

கொரோனா வைரஸ் தொற்று அனைத்துத் தொழில்களையும் முடக்கி உள்ள நிலையில் மருத்துவத் துறை காவல் துறை, ஊடகத் துறை மட்டுமே வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றது.

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் என்னை 10 நாட்களுக்கு சேனலில் பார்க்கமுடியாது என்று கூற ரசிகர்கள் ஷாக் ஆகிப் போகினர்.

பிரியா பவானி சங்கர், சரண்யா ஆகியோரை அடுத்து மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்காகவே செய்திச் சேனலை வளைத்து வளைத்துப் பார்த்த இளைஞர்கள் ஏராளம்.

d65954ce46389e96740eca68211a7277

அம்மணி திடீரென யாருக்கும் சொல்லாமல் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொள்ள தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது. சரி போகட்டும் என்று மனதைத் தேற்றிய ரசிகர்கள் அனிதா சம்பத்திற்காக செய்தி பார்ப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.

கொரோனா ஊரடங்கிலும் பணியை தொடர்ந்து செய்துவந்த அனிதா தற்போது ஒரு ட்வீட் போட்டு மீண்டும் ரசிகர்களைக் காயப்படுத்தியுள்ளார். அதாவது, “கொரோனா பரவி வரும் காரணத்தினால்… வீட்டில் உள்ளோர் நலன்கருதி இன்றில் இருந்து 10 நாட்களுக்கு சிறு விடுப்பு எடுத்துள்ளேன்.. 10 நாட்களுக்கு செய்திகளில் வரமாட்டேன்.. கொஞ்சம் மிஸ் பன்ற மாதிரிதான் இருக்கு..என்ன பண்றது.. நீங்களும் பத்திரமா இருங்க. அதுவரை தினம் யூ-டியூபில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன