தமிழ் சினிமாவில், தொடர் கொரோனா லாக் டவுனால் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்கவில்லை. இதனால் டிரெய்லர் வெளியீடு, டீசர் வெளியீடு, ஆடியோ வெளியீடு இவ்வளவு ஏன் எந்த பட வெளியீடும் கூட நடக்கவில்லை. தியேட்டர்கள் திறக்காததால் பல படங்கள் பெட்டிக்குள் முடங்கின.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக டீசர், ட்ரெய்லர், வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆண்ட்ரியா நடிக்கும் கா திரைப்பட டீசர் வரும் 24ல் வெளியிடப்படுகிறது.
இந்த படத்தை ஷாலோம் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. நாஞ்சில் என்பவர் இயக்கியுள்ளார்.