இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்
இந்த இரண்டு சிக்சர்கள் குறித்துதான் சமூக வலைதளங்களை பேசிக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் ரோகித் சர்மா அடித்த கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்களை என்னால் நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளார்
நியூசிலாந்து மண்ணில் முதல் முதலாக டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் என்ன ஒரு அருமையான மேட்ச் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார் ரோகித் சர்மா உட்பட இந்திய கிரிக்கெட் அணியினர் அனைவரும் அமிதாப்பச்சனுக்கு நன்றி கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது