நடிகர் அமீர்கான் நேற்று முன் தினம் ராமேஸ்வரம் , அரிச்சல்முனை, தனுஷ்கோடி பகுதிகளில் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக வந்திருந்தார்.
இவர் நடிக்கும் படத்தின் பாடல் காட்சி ஒன்று இங்கு படமாக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் திரைப்படத்துறையில் சிறந்த கலைஞர்கள் உள்ளனர் தமிழ்ப்படத்தில் நடிப்பது தன் விருப்பம் எனவும் கூறி இருந்தார்.
மேலும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி வருண்குமார் முன்னிலையில் போதைப்பொருளை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது தவறு எனவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.