அம்பானி வீட்டுத் திருமணம்… குடும்பத்துடன் ஜாம்நகர் சென்ற நடிகர் ரஜினிகாந்த்…

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் வரும் ஜூலை 22 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தற்போது மார்ச்…

superstar rajinikanth

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் வரும் ஜூலை 22 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தற்போது மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 3 ஆம் தேதி வரை ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளெக்சில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

raji2

ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ரன்பிர் கபூர், ஆலியா பாட், வருண் தவான், ஆதித்யா ராய், சாரா அலி கான், அனன்யா பான்டே போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹானாவின் கச்சேரியும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது. இதற்காக ரிஹானாவிற்கு 52 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடந்த இந்த இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பானதாக அமைந்ததாகவும், மீண்டும் இந்தியாவிற்கு வர விரும்புவதாகவும் பாடகி ரிஹானா தெரிவித்தார்.

ambani

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அட்லி, தனது மனைவி பிரியா மற்றும் குழந்தையுடன் அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜாம்நகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அடுத்தப்படியாக நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் அம்பானியின் வரவேற்பை ஏற்று ஜாம்நகர் சென்றிருக்கிறார். அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்து நன்றி என்று கூறிச் சென்றார்.