ஜி வி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இசையமைப்பாளர், பின்னனி பாடகர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 2006 ஆம் ஆண்டு வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜி வி பிரகாஷ். முதல் படமே இவருக்கு வெற்றி படமாகவும் பல பாராட்டுகளையும் பெற்று தந்தது.
அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு மதராசபட்டினம் திரைப்படத்தில் இசையமைத்தார் ஜிவி பிரகாஷ் குமார். இந்தத் திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது குறிப்பாக பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடல் மெகா ஹிட் ஆனது. அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள், காக்கா முட்டை போன்ற பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜி வி பிரகாஷ் குமார்.
ஜி வி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகும் ரொமான்டிக் பாடல்கள் மெலடி பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். ஜி வி பிரகாஷ் தனது படத்தில் கண்டிப்பாக ஒரு மெலடி பாட்டு வைப்பார். அதை தனது மனைவி சைந்தவியை பாட வைப்பார். சைந்தவி குரலில் ஜிவி பிரகாஷ் இசையில் பாடல் இனிமையாக இருப்பதோடு கண்டிப்பாக ஹிட் ஆகும். நடிகராகவும் பிரகாஷ் குமார் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
ஜி வி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமான் அவர்களின் சகோதரியான ஏ ஆர் ரிஹானா அவர்களின் மகன் ஆவார். ஜிவி பிரகாஷ் சைந்தவியை 2013 ஆம் ஆண்டு காதாலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு அன்வி என்ற மகள் பிறந்தார். இந்த வருடம் மே மாதம் இருவரும் பிரிவதாக ஒருமனதாக அறிவித்திருந்தனர். இவர்களின் பிரிவுக்கு இவரது தாயார் ஏ ஆர் ரிஹானா தான் காரணமா இருக்கலாம் என்று பல பேச்சுகள் வந்த நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் இதைப் பற்றி ஓபனாக பேசியிருக்கிறார் ஜிவி பிரகாஷ் அவர்களின் தாயார் ரிஹானா.
ஏ ஆர் ரகுமான் இதைப்பற்றி பேசும் பொழுது அவங்க ரெண்டு பேரும் விரும்பினாங்க ஒன்னா சேர்ந்து வாழ்ந்தாங்க. இப்போ பிரியணும்னு நினைக்கிறாங்க பிரிச்சிருக்காங்க. இதுல நான் என்ன செஞ்சிருக்க முடியும் நான் சொன்ன உடனே பிரிஞ்சிருவாங்களா இல்லை சேர்ந்திடுவாங்ககளா. அவங்க அவங்க வாழ்க்கை அவங்களுக்கு எது சரின்னு படுதோ அதைத்தான் உங்க முடிவு எடுப்பாங்க இதுல எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஓபன் ஆக பேசியிருக்கிறார் ஏ ஆர் ரிஹானா.