சஞ்சீவுக்கு இப்படி ஒரு திறமையா? ஷாக்கான ஆல்யா… !!

நடிகர் சஞ்சீவ் அபூர்வா என்னும் மலையாளப் படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் தமிழில் இவர் நடித்த குளிர் 100 டிகிரி திரைப்படம் சிறப்பான வெற்றியினைப் பெற்றது. அதன்பின்னர் இவர் காதல் தோழி, நீயும்…

நடிகர் சஞ்சீவ் அபூர்வா என்னும் மலையாளப் படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் தமிழில் இவர் நடித்த குளிர் 100 டிகிரி திரைப்படம் சிறப்பான வெற்றியினைப் பெற்றது.

அதன்பின்னர் இவர் காதல் தோழி, நீயும் நானும், சகாக்கள், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு, உயிருக்கு உயிராக, ஆங்கிலப் படம், 6 அத்தியாயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பெரிதாக வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா-ராணி சீரியல் மூலம் சீரியலில் கால் பதித்தார்.

9e60e6eb6fcf17307271b0c468fc5ceb-1

இந்த சீரியல் 7 மணிக்கு ஒளிபரப்பானதாலோ என்னவோ வெகு விரைவிலேயே இதற்கான வரவேற்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக கிடைத்தது. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த ஆல்யாவுடன் காதல் கொண்ட இவர், இந்த சீரியலை முடித்த கையோடு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின்னர் கர்ப்பான நிலையிலும் ஆல்யா டான்ஸ் ஜோடி டான்ஸ் என்னும் நடன நிகழ்ச்சியின் நடுவராகக் கலந்து கொண்டார். அதேபோல் சஞ்சீவ் காற்றின் மொழி என்னும் புதிய சீரியலில் நடித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த மாதம் ஐலா சையத் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

ஆல்யா – சஞ்சீவ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டுவரும் நிலையில், தற்போது

சஞ்சீவ் துப்பாக்கி சுடும் பழைய வீடியோ ஒன்றை ஆல்யா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சஞ்சீவ் துப்பாக்கி சிறப்பாக சுடுவதை பார்த்த ஆல்யாவிற்கு அது இன்ப அதிர்ச்சியாகவே இருந்து வருகிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன