கௌதமி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடிக்கும் நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவர் என பல துறைகளில் பணியாற்றுபவர். இதுமட்டுமல்லாது அரசியலிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
1988 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் பிரபு நடித்த ‘குரு சிஷ்யன்’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே கௌதமி அவர்களுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து அதிகமாக ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார்.
அபூர்வ சகோதரர்கள் (1989), ராஜா சின்ன ரோஜா (1989), பணக்காரன் (1990), ஊரு விட்டு ஊரு வந்து (1990), நம்ம ஊரு பூவாத்தா (1990), தர்மதுரை (1991), நீ பாதி நான் பாதி (1991), தேவர் மகன் (1992), நம்மவர் (1992), குருதிப்புனல் (1995) போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். கௌதமி.
2008 ஆம் ஆண்டு ‘தசாவதாரம்’ படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற விருதை வென்றார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் பதினாறு வருட இடைவேளை எடுத்துக் கொண்டு நோயில் இருந்து குணமாகி 2015 ஆம் ஆண்டு ‘பாபநாசம்’ என்ற படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார் கௌதமி.
நடிகர் கமலஹாசனுடன் 13 வருடம் லிவிங் உறவில் இருந்து வந்த கௌதமி 2016 ஆம் ஆண்டு அந்த உறவை முறித்துக் கொண்டு முதல் கணவருக்கு பிறந்த மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது வாழ்க்கைக்கான ஒரு அட்வைசை வழங்கியுள்ளார் கௌதமி. அவர் கூறியது என்னவென்றால், யார் என்ன சொன்னாலும், நீங்க எப்படி இருந்தாலும் உங்களை பெர்ஃபக்ட் என்று சொல்லும் நபரின் பேச்சை மட்டும் எப்போதும் கேளுங்க என்று கூறியுள்ளார் நடிகை கௌதமி.