என்னோட எண்ணம் எல்லாம் இதுமட்டும் தான் இருக்கும்… ஜனகராஜ் பகிர்வு…

By Meena

Published:

ஜனகராஜ் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். தமிழில் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு இணையாக பார்க்கப்பட்டவர்.

1971 ஆம் ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். கே. பாலசந்தர் அவர்களின் வாயிலாக 70களில் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்து வந்தார். பின்னர் இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜனகராஜ் அவர்களின் திறமையை பார்த்து ‘கிழக்கே போகும் இரயில்’ திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

இதன் மூலமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் ஜனகராஜ் அவர்களுக்கு கிடைத்தன. 80களில் பெரும்பாலான படங்களில் ஜனகராஜ் நடித்திருந்தார். தனது விசித்திரமான குரல் மற்றும் முக பாவனைகளுக்காக அறியப்பட்டார். ஜனகராஜ் தமிழ் திரைப்படங்களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார்.

நிழல்கள் (1980), சிந்து பைரவி ( 1985), பாலைவன ரோஜாக்கள் (1986), முதல் வசந்தம் (1986), அக்னி நட்சத்திரம் (1988), ராஜாதி ராஜா (1989) மற்றும் அபூர்வ சகோதரர்கள் (1989) நாயகன் (1987), கீழ் வாசல் (1990), அண்ணாமலை (1992) மற்றும் பாஷா (1995) போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் . 80கள் மற்றும் 90களின் முற்பகுதியில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு முக்கிய பக்கபலமாக இருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜனகராஜ் அவர்களிடம் ரசிகர் ஒருவர், இளமையில் நீங்கள் காதலித்திருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜனகராஜ் அவர்கள், எனக்கு காதல் வரவில்லை, மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் என் மனதில் எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளார்.