அயோத்திக்கு சென்ற ஆலியா பட் சேலையை கவனிச்சீங்களா?.. அதில், இத்தனை விஷயம் அடங்கியிருக்கா?..

By Sarath

Published:

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் கலந்துகொண்டனர். அந்த விழாவிற்கு ஆலியா பட் முழு ராமயணக் கதையை சித்தரித்த சேலையை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சில பிரபலங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினிகாந்த், சச்சின், அமிதாப் பச்சன், ஆலியா பட், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்ட இஸ்லாமிய நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்ட இந்து மதத்தை சார்ந்த நடிகைகள், ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரியவில்லை.

அயோத்தி ராமர் கோயிலில் ஆலியா பட்:

ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூருடன் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வந்திருந்த போது ரன்பீர் கபூர் வெள்ளை நிற பைஜாமா உடையை அணிந்திருந்தார் . ஆலியா பட் ராமர் நீலம் என்று சொல்லப்படும் நீல நிற சேலையை அணிந்து வந்து அந்த விழாவில் கலந்து கொண்டது ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது.
முதலில் ஆலியா பட்டின் சேலை சாதாரண நீல நிற சேலை என்று அனைவரும் நினைத்திருந்தனர் . ஆனால் அது சாதாரண சேலை இல்லை ராமரின் பக்தரான ஆலியா பட் தனது சேலை முழுவதும் ரமாயணத்தின் கதையை சித்தரித்து ஒரு புது வடிவில் வடிவமைத்தது அனைவரின் கவனத்தை கவர்ந்ததுள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான அனிமல் படத்தில் நடித்திருந்தார். ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்ட இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து ரன்பீர் கபூர் ராமயணம் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமாயண கதையை சொல்லும் சேலை:

ரன்பீர் கபூர் நடிக்க போகும் ராமயணம் படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் ஆலியாபட்டிற்கு பதில் சீதையாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பிரம்மாஸ்திரா படத்தில் மனைவி ஆலியா பட் உடன் ரன்பீர் கபூர் இணைந்து நடித்திருந்தார். அதன் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில், ராமாயணம் படத்தை 3 பாகங்களாக உருவாக்கப் போவதாக கூறுகின்றனர்.