தமிழில் கிரீடம், தலைவா , தேவி, சைவம் உள்ளிட்ட முக்கியமான படங்களை இயக்கியவர் ஏ.எல் விஜய். இவர் பிரபல நடிகை அமலா பாலை காதலித்து மணந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் இயக்குனர் ஏ.எல் விஜய்க்கும், சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில் விஜய் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இன்று (30.05.19) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.