ரசிகர்களிடம் அஜித் வைத்துள்ள வேண்டுகோள்… வெளியானது தகவல்!!

தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அந்த இடத்தினைப் பிடித்தவர்  நடிகர் அஜித். அவர் தனது ரசிகர் மன்றத்தினைக் கலைத்தபோதிலும், அவரின் ரசிகர்கள் அவரை விடாப்பிடியாய் கொண்டாடி வருகின்றனர். உலகத்திலேயே ரசிகர் மன்றத்தினைக் கலைத்த…

தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அந்த இடத்தினைப் பிடித்தவர்  நடிகர் அஜித். அவர் தனது ரசிகர் மன்றத்தினைக் கலைத்தபோதிலும், அவரின் ரசிகர்கள் அவரை விடாப்பிடியாய் கொண்டாடி வருகின்றனர். உலகத்திலேயே ரசிகர் மன்றத்தினைக் கலைத்த ஒரே நடிகர் என்னும் பெயரினையும் பெற்றவ என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் உலகமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் போராடும் நிலையில், நடிகர் அஜித் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

69ad6eaac2870f6b733370e39afdab49

அதாவது நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1 ஆம் தேதி என்ற நிலையில் அவரது ரசிகர்கள் ஏறக்குறைய 2 வார காலமாகவே அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் அஜித் பிறந்தநாளான அன்று அவருக்கு வாழ்த்துக் கூறும் விதமாக பொது டிபியை அருண் விஜய், ஹன்சிகா, பிரியா ஆனந்த், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி, சாந்தனு போன்ற திரைப்பிரபலங்கள் 16 பேர் சேர்ந்து வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் அஜித் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக அஜித்தின் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர்கள் சிலருக்கு அழைப்பு வந்துள்ளது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன