மங்காத்தா 2 படம் குறித்த ஆச்சரியமான தகவல்!

தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து கொண்டிருக்கின்றன அஜித்தின் அடுத்த படத்தை இயக்க 5 இயக்குனர்கள் தற்போது…


96cfea4fc0435aa6dd485e7267c27977

தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து கொண்டிருக்கின்றன

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க 5 இயக்குனர்கள் தற்போது தயார் நிலையில் இருந்தாலும் ’மங்காத்தா 2’ படம்தான் அஜித்தின் அடுத்த படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

‘மாநாடு’ படத்தை இயக்கி முடித்ததும் ’மங்காத்தா 2’படத்தை வெங்கட்பிரபு இயக்குவார் என்றும் இந்த படத்திற்கான திரைக்கதை முழுவதும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கவிருந்து கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைக்காத பிரசன்னாதான் ’மங்காத்தா 2’படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன