விடாமுயற்சி லுக் இதுதானா?.. விமான நிலையத்தில் அஜித்தை அப்படி பார்த்ததில் அப்செட்டான ரசிகர்கள்!..

By Sarath

Published:

விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா திமுக சார்பில் கொண்டாடப்பட உள்ளது. திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், கலைஞர் 100 விழா வரும் டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திரும்பிய அஜித்தின் லேட்டஸ்ட் லுக்:

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேசுகையில், “அகில இந்திய அளவில் அனைத்து மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம் என கூறியுள்ளார். மேலும், விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரையும் அழைக்கப் போகிறோம். அவர்கள் கலந்துகொள்வார்கள் என நம்புகிறோம். யாரையும் கட்டாயப்படுத்த போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல நாட்கள் கழித்து சென்னை திரும்பியுள்ளார் நடிகர் அஜித் குமார்.

விடாமுயற்சி படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, திரிஷா, சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திர்க்கு அனிருத் இசையமைப்பாளராகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பாளராகவும் இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றனர்.

அண்மையில், ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் செல்ல உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் 100 விழாவில் பங்கேற்பாரா?

கலைஞர் முதலமைச்சராக இருந்த போது நடத்தப்பட்ட பாசத் தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித் குமார் கலந்து கொண்டு பேசும்போது, எங்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்று விழா மேடையிலேயே சொன்னது பெரும் சர்சை வெடித்தது .

பொதுவாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் அஜித் அதற்கு பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதேயில்லை. மேலும், இப்போது தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தேனாண்டாள் முரளி கலைஞர் 100 விழாவிற்கு அழைப்பு விடுத்ததற்கு அவர் சென்னை திரும்பி இருப்பாரோ என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழும்பியுள்ளன. ஆகவே, அஜித் கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா அல்லது அடுத்தக்கட்ட விடாமுயற்சி படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் விடாமுயற்சி லுக்கை பார்த்த ரசிகர்கள் எந்தவொரு ஃபிட்னஸாகவும் இல்லையே, இதிலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக் தானா? அப்படியே விவேகம் ஃபீல் வருகிறதே என ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.