தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அந்த இடத்தினைப் பிடித்தவர் நடிகர் அஜித். அவர் தனது ரசிகர் மன்றத்தினைக் கலைத்தபோதிலும், அவரின் ரசிகர்கள் அவரை விடாப்பிடியாய் கொண்டாடி வருகின்றனர். உலகத்திலேயே ரசிகர் மன்றத்தினைக் கலைத்த ஒரே நடிகர் என்னும் பெயரினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள், இந்தியத் திரை உலக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துக்களைக் கூறினர்.
நடிகர் சுஹேல் சந்தோக், அஜித்திற்கு வாழ்த்துகளைப் பதிவிட்டதோடு அஜித் குறித்த ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “2013 ஆம் ஆண்டு வீரம் படம் எடுக்கப்பட்ட சமயத்தில் அஜித்துடன் நான் 500 கிலோமீட்டர் பைக்கிலேயே பயணம் செய்தோம். அப்போது டீ குடிக்க நினைத்து ஒரு இடத்தில் நிறுத்த அங்கிருந்த நபர் ஒருவர் குடிசை வீட்டுக்கு அழைத்துச் சென்று டீ கொடுத்தனர்.
அஜித்துடன் புகைப்படம் எடுக்க அவர்கள் தயங்கிய நிலையில், அஜித் அவர்களுடன் புகைப்படம் எடுத்தார். அதன்பின்னர் வீடு வந்தபின்னர் அந்தப் புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பி வைத்தார்” என்று சுஹேல் பதிவிட்டுள்ளார்