கொரோனா தொற்றினைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவில் முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் எந்தவிதமான தொழில்களும் இயங்காத நிலையில் ஏழை, எளியோர், ஆதரவற்றோர், முதியோர் எனப் பல தரப்பட்ட மக்களும் உணவின்றி தவித்து வருவதையொட்டி அரசாங்கத்துடன் இணைந்து சினிமாப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, லாரன்ஸ், கமல், சூர்யா, சிவ கார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலரும் நிதியுதவி வழங்கிய நிலையில் தல- தளபதி மட்டும் நிதியுதவி வழங்காதது பெரும் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையானது ஊடகங்களில் பெரிதானதைத் தொடர்ந்து அஜித் 1.25 கோடி நிதியுதவி வழங்கினார். அவரைத் தொடர்ந்து தளபதி விஜய் தற்போது ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதாவது இவர் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,
கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சம்
கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம்,
தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், புதுவை முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.1.30 கோடி வழங்கியுள்ளார்.
அஜித் 1.25 கோடிதான் வழங்கினார், ஆனால் தளபதி ரூ.1.30 கோடி வழங்கினார் என தல- தளபதி ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.