இயக்குனர்கள் சங்கத்திற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த முடிவு… முதற்கட்டத்தையும் தொடங்கினார்…

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் தனது ஸ்டைல் மற்றும் நடைக்காகவே பிரபலமானவர். இவர் பாடகி லதாவை திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு ஐஸ்வர்யா…

aish

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் தனது ஸ்டைல் மற்றும் நடைக்காகவே பிரபலமானவர். இவர் பாடகி லதாவை திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு ஐஸ்வர்யா சௌந்தர்யா என பெண் குழந்தைகள் ஆவர். அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரைப்படங்களில் பணிபுரியும் இயக்குனர் மற்றும் முன்னணி நடிகரான தனுஷின் முன்னாள் மனைவி ஆவார்.

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது மட்டும் இல்லாமல் வை ராஜா வை சினிமா வீரன் என்று ஆவணப்படம் லால் சலாம் ஆகிய திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

மேலும் விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலையும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உன் மேல ஆசைதான் என்ற பாடலையும் பாடியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் பின்னணி பாடகி ஆகவும் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ரீமா சென்னுக்கு டப்பிங் செய்து டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமா இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் சங்கத்தின் நலனுக்காக ஒரு முடிவை எடுத்துள்ளார். அது என்னவென்றால் தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களது குழந்தைகளின் படிப்பு செலவிற்காக ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் நன்கொடை வழங்குவதாக உறுதி செய்துள்ளார்.

இந்த முயற்சியின் தொடக்க கட்டமாக தமிழ் சினிமா திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவரான ஆர் வி உதயகுமார் அவர்களிடம் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து பல உதவிகள் செய்வதாகவும் உறுதியளித்திருக்கிறார்.