சங்கீதா கிருஷ் தென்னிந்தியாவின் நடிகை, நடன கலைஞர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தமிழ் தெலுங்கு மலையாள திரைப்படங்களில் பெரும்பாலாக நடித்திருக்கிறார் சங்கீதா. மலையாள சினிமாவில் இவரை ரசிகா என்று அழைக்கின்றனர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சங்கீதா கிருஷ்.
ஆரம்பத்தில் ரசிகா என்ற பெயரில் 1990களின் பிற்பகுதியில் மலையாளத்தில் அறிமுகமானார் சங்கீதா. அதன் பிறகு சிறிய வேடங்களில் நடித்து இருந்த சங்கீதா உதவிக்கு வரலாமா என்ற லோ பட்ஜெட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2003 ஆம் ஆண்டு பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் சங்கீதா. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினை வென்றார் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் வென்றார்.
தொடர்ந்து எவனோ ஒருவன், நேபாளி, தனம், சிலம்பாட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சங்கீதா. இது தவிர விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பாடகர் கிருஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஒரு நேர்காணலில் தனது கணவரை பற்றி பகிர்ந்து கொண்ட சங்கீதா, ஆரம்பத்தில் திருமணம் முடிந்த முதல் இரண்டு ஆண்டுகள் வாழ்க்கை நரகமாக தான் இருந்தது. எங்கள் இருவருக்கும் சரியாக ஒத்துப் போகவில்லை. அதற்கு பிறகு நாங்கள் டைம் எடுத்து இருவரும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் இன்று சேர்ந்து வாழ்வதற்கு முக்கியமான காரணம் எங்கள் இருவருக்கும் நடுவில் மூன்றாவது ஆட்களை நாங்கள் உள்ளே விடவில்லை என்று எமோஷனாக பேசியிருக்கிறார் சங்கீதா.