ஜூன் உனக்கு.. அக்டோபர் எனக்கு!.. இப்பவே புக் பண்ண கமல்ஹாசன், ரஜினிகாந்த்!.. அப்போ விஜய், அஜித் நிலைமை?

By Sarath

Published:

தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியாகவில்லை என்கிற அளவிலே பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் உள்ளது. பெரிய படங்கள் எனக்கு சொல்லிக் கொண்டு வெளியான தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் உள்ளிட்ட படங்கள் பெரிய வசூலை ஈட்டவில்லை.

வேட்டையன் ரிலீஸ் அப்டேட்:

கடந்த ஆண்டு ஜெயிலர் மற்றும் லியோ 600 கோடி ரூபாய் வசூலை இயற்றிய நிலையில், வாரிசு மற்றும் துணிவு வசூல் செய்த 300 மற்றும் 200 கோடி ரூபாயை மட்டுமின்றி 100 கோடி ரூபாய் வசூலை கூட இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் தொடவில்லை என மற்ற திரை உலகங்கள் தமிழ் சினிமாவை ஏளனமாக பார்த்து வருகிறது.

ஆனால் இன்றைய நிலைமை எல்லாம் தேர்தல் முடியும் வரை தான் என்றும் அதன் பின்னர் வரிசையாக பெரிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஒரு ஜூன் மாதம் வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பு இன்று வெளியானது.

பெரிய படங்கள் வெளியானால் அந்த மாதம் முழுவதுமே அந்த படங்களே பெருவாரியான தியேட்டர்களை ஆக்கிரமிப்பு செய்துவிடும். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முந்திக் கொண்டு ரிலீஸ் தேதியை லாக் செய்துள்ள நிலையில், அஜித்தின் விடாமுயற்சி பற்றியும் சூர்யாவின் கங்குவா பற்றியும் விஜய்யின் கோட் ரிலீஸ் குறித்தும் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக்கியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதை டீசர் நாளை வெளியாகி பான் இந்திய அளவில் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தையும் அல்லு அர்ஜுன் பிடித்துள்ள நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன், சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் என பல பெரிய படங்கள் எந்த மாதத்தில் வெளியாக போகின்றன என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

விரைவில், ஒரு நல்ல நாள் பார்த்து ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. சில படங்கள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.