சினிமா பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள கலைபுலி தானு அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலர்கள் மற்றும் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் வருமான வரி சோதனை பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்திலும் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

