எம்ஜிஆர் உடன் சேர்ந்து காதல் காட்சிகளில் நடிக்க ஆசைப்பட்ட நடிகை ஸ்ரீதேவி!

By Velmurugan

Published:

1963ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீதேவி தன்னுடைய குழந்தை வயதிலிருந்து சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். சின்னப்ப தேவர் தயாரித்த துணைவன் திரைப்படத்தில் பாலமுருகன் என்னும் கடவுள் கதாபாத்திரத்தில் தன் திரைப்பயணத்தை தொடங்கினார் ஸ்ரீதேவி. துணைவன் திரைப்படத்திற்கு கிடைத்த நல்ல வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி நடித்து வந்துள்ளார். அந்த சமயம் சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த எம்ஜிஆர் ஐ சந்திக்க தயாரிப்பாளர் சின்னப்ப தேவர் சென்றிருந்தார். அப்போது ஸ்ரீதேவியையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.

அப்போது சின்னப்ப தேவர் ஸ்ரீதேவியிடம் நான் நடிகர் எம்ஜிஆரை பார்த்து வணக்கம் என மரியாதை கொடுக்கும் பொழுது நீயும் முறையாக வணக்கம் என அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால் மட்டும் தான் எதிர்காலத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு உனக்கும் கிடைக்கும் என ஸ்ரீதேவிக்கு புரியும்படி சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அதன்படியே எம்ஜிஆர் வந்தவுடன் சின்னப்ப தேவர் வணக்கம் என மரியாதை கொடுக்க சொல்லிக் கொடுத்தவாறு ஸ்ரீதேவியும் வணக்கம் என எம்ஜிஆரை கும்பிட்டு மரியாதை கொடுத்துள்ளார்.

அதன் பிறகு தான் சிபி ஜம்புலிங்கம் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு நடிகர் எம் ஜி ஆர் நடித்த நம் நாடு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதேவிக்கு கிடைத்தது. இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருப்பார். 1975, 76 களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகை ஜெயலலிதா மற்றும் லதா என பல இளம் நடிகைகளுடன் இணைந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

அந்த நேரத்தில் நடிகை ஸ்ரீதேவி கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் ஸ்ரீதேவி, கமல், ரஜினிகாந்த் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். தமிழ் திரைப்படம் ஸ்ரீதேவிக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. ஸ்ரீதேவிக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்த மூன்று முடிச்சு திரைப்படம் 1976 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல்வராக பணியேற்றார். அதன் பின் சினிமாக்களில் அவர் நடிப்பதை மறுத்துள்ளார். இந்த காரணத்தினாலேயே நடிகர் எம் ஜி ஆர் உடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதேவிக்கு கிடைக்கவில்லை. எம்ஜிஆர், சிவாஜி, என்டி ராமராவ் என் நாகேஸ்வர ராவ் என தென்னிந்திய பிரபலங்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி பின்னர் நாட்களில் எம்ஜிஆரை தவிர மற்ற சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடி நடித்துள்ளார்.

ரஜினிகாந்தின் போஸ்டர்களை கிழிக்க வைத்த எம் ஜி ஆர்! நடந்தது என்ன!

நடிகர் எம் ஜி ஆரும் நடிகை ஜெயலலிதா அவர்களும் இணைந்து நடித்த காதல் காட்சி தான் நான் முதன்முதலில் நேரில் பார்த்த காதல் காட்சிகள். மேலும் எம்ஜிஆர் படங்களில் காதல் காட்சிகளை நான் பொதுவாகவே ரசித்துப் பார்த்து வந்துள்ளேன் என நடிகை ஸ்ரீதேவி ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதை அடுத்து எம்ஜிஆர் படங்களின் காதல் காட்சிகள் மிக ஸ்வீட்டாக இருக்கும் எனவும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறியுள்ளார். மக்கள் திலகம் எம்ஜிஆர்ரும் நடிகை ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்திருந்தால் மிக நன்றாகத் தான் இருந்திருக்கும் ஆனால் அதற்கு எம்.ஜி.ஆர் சம்மதித்திருப்பாரா என்பது தான் தெரியவில்லை. இருந்தாலும் எம்.ஜி.ஆருடன் இணைந்து காதல் காட்சிகளில் நடிக்க வேண்டும் என நினைத்த ஸ்ரீதேவியின் ஆசை இறுதிவரை நிறைவேறாமலே சென்றுள்ளது.

ஆனால் நடிகர் எம்ஜிஆருக்கு ஸ்ரீதேவி மீது ஒரு தனிப்பட்ட பாசம் இருந்துள்ளது. முதல் முதலில் அண்ணா திமுக சார்பில் கலைச் சேவை புரிபவர்களுக்கு அண்ணா விருதும் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நடிகை ஸ்ரீதேவிக்கும் வழங்கி கௌரவித்தார் நடிகர் எம் ஜி ஆர்.