பிரேம்ஜி கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவரது சகோதரர் வெங்கட் பிரபு பிரபலமான இயக்குனராக இருக்கிறார் மற்றும் இவரது தந்தை கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர். மேலும் இவரது பெரியப்பா தான் இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் தனது சகோதரர் வெங்கட் பிரபு யுவன் சங்கர் ராஜா உடன் இணைந்து ஒரு இசை பேண்ட் குழுவை அமைத்து பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சென்னை 600028 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரேம்ஜி.
தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா, சென்னை 600028 -2 போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் பிரேம்ஜி. இவரது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் கண்டிப்பாக பிரேம்ஜி இருப்பார்.
பிரேம்ஜி உடன் இணைந்து நடித்த நடிகைகளுள் ஒருவர்தான் கவர்ச்சி நடிகை சோனா. சில வருடங்களுக்கு முன்பு பிரேம்ஜியும் சோனாவும் காதலித்து வருவதாக கிசுகிசுகள் வெளிவந்தது. அதைப்பற்றி தற்போது ஒரு நேர்காணலில் சோனா பிரேம்ஜியை பற்றி கூறியிருக்கிறார்.
சோனா கூறியது என்னவென்றால் நானும் பிரேம்ஜியும் காதலித்ததாகவும் ஒரு தயாரிப்பாளரால் பிரிந்து விட்டோம் என்றும் கிசுகிசுக்கள் வெளிவந்தது. ஆனால் உண்மையில் அப்படி கிடையவே கிடையாது. நானும் பிரேம்ஜியும் நல்ல நண்பர்கள் தான். அது ஒரு தவறான வதந்தி தான். நான் அவருக்கு திருமணம் நடக்கும் போது கூட இப்படி எல்லாம் பேசுறாங்க என்று நான் கேட்டேன். அப்போது பிரேம்ஜி எனக்கு பிரச்சனை இல்ல உனக்கு பிரச்சனை இல்ல என்னை கட்டிக்க போற பொண்ணுக்கு பிரச்னை இல்ல மத்தவங்க யாரு பேசுனா நமக்கு என்ன என்று அசால்டாக இதை கடந்து சென்று விட்டார் என்று பகிர்ந்து இருக்கிறார் நடிகை சோனா.