பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த நபர் ஒருவர் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாலிவுட் நடிகை ஒருவர் சமீபத்தில் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த 41 வயது நபர் ஒருவர் இரண்டு கால்களையும் அவரது சீட் மேல் வைத்து தொந்தரவு கொடுத்ததாகவும் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது தலை கழுத்து ஆகிய பகுதிகளில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்
இந்தப் புகாரை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர் அவரிடம் விசாரணை செய்தபோது அவரது பெயர் விகாஸ் சசிதேவ் என்றும் அவர் நடிகையை பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த பயணியை போஸ்கோ சட்டத்தில் கைது போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட நடிகைக்கு வயது 17 என்பதால் அவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது