சரோஜாதேவி எம்ஜிஆர், சிவாஜி என இரு பெரும் ஜாம்பவான்களுடன் பல படங்களில் நடித்து கலக்கி உள்ளார். அவர் சரோஜாதேவி பேசுகிறேன் என்ற நூலில் எழுதிய சில குறிப்புகள் ஆச்சரியப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.
கல்யாணப்பரிசு படம் எப்படிப்பட்ட வெற்றிப்படமாக அமைந்தது என்பதும் அந்தப் படத்தில் நடித்ததனால சரோஜாதேவிக்கு எந்த அளவுக்குப் பெயர் கிடைத்தது என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். அந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததால தெலுங்கு பதிப்பிலும் அவரையே நடிக்க வைத்தார் இயக்குனர் ஸ்ரீதர்.
இதைத் தொடர்ந்து இந்திப் பதிப்பிலும் அவர் தான் நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் சரோஜாதேவிக்கும் இயக்குனர் ஸ்ரீதருக்கும் மனக்கசப்பு உண்டானது. இதனால் தான் தன்னோட இந்திப்பதிப்பில் சரோஜாதேவியை நடிக்கவைக்கவில்லை ஸ்ரீதர்.
இதை சரோஜாதேவியிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார். கல்யாணப்பரிசு படத்தின் தெலுங்கு பதிப்பின்போது நீங்கள் நடந்துகிட்ட முறை எனக்குப் பிடிக்கல. அதன் காரணமாகத் தான் உங்களை இந்திப் பதிப்பில் நான் போடலன்னுசொன்னாராம் ஸ்ரீதர்.
அந்தப் படத்துல நடிக்க முடியலையே என்ற மனவருத்தத்தில் இருந்தாராம் சரோஜா தேவி. அந்த சமயத்துல தான் பாலும் பழமும் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு சரோஜாதேவிக்குக் கிடைத்தது.
அதுல டிபி நோயாளியாக சரோஜாதேவி வருவார். ஒளியிழந்த பார்வை, ஒல்லியான தேகம் இப்படித் தான் டிபி நோயாளி இருப்பாங்க. இந்த தோற்றம் அப்போது இருந்த சரோஜாதேவிக்கு ரொம்பவே ஒட்டிப்போனதால் அந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
அந்தப் படத்துல எனக்கு அப்படிப்பட்ட தோற்றம் அமைந்ததுக்குக் காரணம் கல்யாணப்பரிசு படத்தின் இந்திப் பதிப்பில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது தான் என்றும் சரோஜாதேவி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.