ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்றுவரும் சமந்தா… வெளியான புகைப்படம்!!

நடிகை சமந்தா 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி  என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். அடுத்து தெலுங்கில் ஏ மாயா சேசவா திரைப்படத்தில் நடிக்க அது மாஸ் ஹிட்டானது. விண்ணைத்தாண்டி…

நடிகை சமந்தா 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி  என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். அடுத்து தெலுங்கில் ஏ மாயா சேசவா திரைப்படத்தில் நடிக்க அது மாஸ் ஹிட்டானது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும் அழகால் தமிழ் இளைஞர்களின் மனதில் பதிந்துவிட்டார். அடுத்து பாணா காத்தாடி படம் இவருக்கு ஓரளவு வரவேற்பினைக் கொடுத்தது, அதன்பின்னர் தெலுங்கு சினிமாவிலேயே கொடி கட்டிப் பறந்த இவர் நான் ஈ படத்தின்மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார்.

88a18460c86355254f95c2ab111abbe5

முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, கொரோனாவால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் வீட்டில் இருந்துவரும் சமந்தா, இந்த நேரத்தை வீணாக்காமல் சினிமாவில் தன்னுடைய நடிப்பினை மேலும் சிறப்பாகச் செய்ய பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரெனிடம் இருந்து நடிப்பு கற்று வருகிறாராம்.

இதை சமந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆல் தி பெஸ்ட் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன