நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு என்று சாதாரணமாக சொல்லலாம் சமந்தாவை. சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் தான் சமந்தா. தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் தனது கெரியரை ஆரம்பித்து கௌதம் வாசுதேவ் மேனனால் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பார் சமந்தா.
இதே படம் தெலுங்கில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஒரே படத்தின் தமிழ் தெலுங்கு வெர்சனில் நடித்து அதன் மூலம் பிரபலமானார் சமந்தா. தெலுங்கில் அந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால் தெலுங்கில் இருந்து பட வாய்ப்புகள் சமந்தாவிற்கு குவிய தொடங்கின. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த சமந்தா அதன் பிறகு விஜய் நடித்த தெறி படத்தில் அவருக்கு ஜோடியானார். தொடர்ந்து விஜயுடன் கத்தி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு நிலையான அந்தஸ்தை பெற்ற நாயகியாக உயர்ந்தார் சமந்தா. இந்த ஒரு பெருமையால் ஹிந்தியில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. அதிலிருந்து அவர் ஒரு பேன் இந்தியா நடிகையாக மாறினார்.
இப்படி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த சமந்தா ஒரு கட்டத்தில் மையோ சிட்டிஸ் என்ற நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அந்த நோயால் மிகவும் பாதிப்பானார். இப்பொழுது தீவிர சிகிச்சை பெற்று ஓரளவுக்கு குணமடைந்த சமந்தா ஒரு வருட காலம் இடைவெளி எடுத்திருக்கிறார். சமீப காலமாக அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இன்று அவருடைய பிறந்தநாள் என்பதால் அவரைப் பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. சமந்தாவின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 100 கோடிக்கும் மேல் இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல் ஹைதராபாத் மும்பை போன்ற இடங்களில் இரண்டு சொகுசு பங்களாவும் சமந்தாவின் பேரில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் அவரிடம் லேண்ட்ரோவர், போர்ச், ஆடி, ஜாகுவார் போன்ற பல சொகுசு வாகனங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சொந்தமாக சாஹி என்ற பெயரில் ஆடை நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் லாபம் பார்த்தும் வருகிறார். மழலையர் பள்ளி ஒன்றை அதிக முதலீட்டில் நிறுவி அதன் மூலமும் பிசினஸ் செய்து வருகிறார் சமந்தா.