அமரன் படத்துல நடிச்சது மட்டும் இல்ல.. கூடவே சாய் பல்லவி செஞ்ச தரமான சம்பவம்.. இதான்யா தேசப் பக்தி..

By John A

Published:

நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோர் நடித்த அமரன் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நாட்டிற்காக இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி காஷ்மீர் போரில் உயிரைத் தியாகம் செய்த சென்னையைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறே அமரன் திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷல் சார்பில் அமரன் திரைப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரபேக்கா மற்றும் முகுந்தின் தந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பினை பலரும் சிலாகித்து வருகின்றனர். மேலும் சிவகாரத்திகேயனுக்கும் இப்படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய வகையில் டிரைலரில் காட்சிகள் மிரட்டுகின்றன. மேலும் சாய்பல்லவி இந்து ரபேக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சின்னத்தம்பி கதை எப்படி உருவாச்சு தெரியுமா? பி. வாசுவிடம் சவால் விட்டு நடித்த மனோரமா..

இப்படம் பெரிய எதிர்பார்ப்பினைக் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை சாய்பல்லவி மேஜர் முகுந்த் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவிடத்திற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சென்ற அவர் அங்கு மேஜர் முகுந்த் மற்றும் இதர நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடித்தால் மட்டும் போதும் என்றில்லாமல் நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்கு அவர்கள் நினைவிடத்திற்கே சென்று அஞ்சலி செலுத்திய சாய்பல்லவி மற்றும் இயக்குநரின் செயல் பாராட்ட வைத்தது. சமூக வலைதளங்களில் சாய்பல்லவியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.