டும்.. டும்.. டும்.. மணக்கோலத்தில் நடிகை ரம்யா பாண்டியன்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

By John A

Published:

தமிழில் டம்மி டபாசு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் அண்ணன் மகளான ரம்யா பாண்டியன் பயோ மெடிக்கல் பொறியியல் முடித்துள்ள ரம்யா பாண்டியன் மணிரத்னத்தின் உதவியாளர் ஷெல்லி இயக்கிய குறும்படத்தின் மூலம் ஊடக வெளிச்சத்திற்கு வந்தார்.

இதனைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ரா ரா ராஜசேகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன்பின் இந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற படமான ஜோக்கர் படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தினைக் கொடுத்தது.

தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ஆண்தேவதை படத்திலும் நடித்தார் ரம்யா பாண்டியன். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தார் குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான்காவதாக வந்தார்.

தனுஷ் 55 இயக்கப் போகும் அமரன் பட இயக்குநர்.. வெளியான சூப்பர் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..

தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகிய இரண்டிலும் பிஸியாக இருக்கும் ரம்யா பாண்யனின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. uம்யா பாண்டியன் யோகா பயிற்சி மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். எனவே யோகா மையத்தில் மாஸ்டராக இருந்த பஞ்சாபைச் சேர்ந்த லோவல் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இன்று கரம்பிடித்திருக்கின்றனர். இவர்கள் காதலுக்கு வீட்டில் பச்சைக் கொடி காட்ட வட இந்தியாவின் புனித நகராமான ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் சிவபுரி என்ற இடத்தில் இவர்களது திருமணம் தமிழ் முறைப்படி நடந்தது.

இவர்களது திருமணத்தில் ரம்யா பாண்டியனின் நெருங்கிய உறவினர்களும், அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களது வரவேற்பு விழா சென்னையில் வருகிற 15-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்திற்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.