1990-களின் பிற்பாடு ரஜினி, கமலுக்கு ரேவதி, குஷ்பூ, மீனா, ரோஜா என வரிசை கட்டிக் கொண்டு நாயகிகள் களம் இறங்க இவர்களுக்கு அடுத்தபடியாக அடுத்த தலைமுறை நடிகைகள் களமிறங்கினர். தேவயாணி, ஸ்நேகா, சிம்ரன் என கோலிவுட்டில் இறங்க கவர்ச்சியை அள்ளி இறைத்து இளசுகளை ஏங்க வைத்து அறிமுகமானவர் ரம்பா.
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொரு நாயகிக்கும் ஒவ்வொரு பட்டம், உதாரணமாக இடையழகி சிம்ரன், கண்ணழகி மீனா, புன்னகை இளவரசி ஸ்நேகா என பட்டம் கொடுக்க ரம்பாவிற்கு தொடையழகி என்ற பட்டம் கொடுத்து கொண்டாடினர். அந்த அளவிற்கு தனது படங்களில் கவர்ச்சி விருந்து படைத்தார்.
இயக்குநர் சுந்தர் சி. யின் உள்ளத்தை அள்ளித்தா இன்றும் ப்ரெஷ்ஷான கிளாசிக் காமெடி படங்களில் ஒன்று. செம ஜாலியாக கார்த்திக், கவுண்டமணி, செந்தில் என நடித்து வெற்றி பெற்ற படம் அது. அதில் ரம்பா ஹீரோயினாக நடித்தார். ஆனால் பிரபு நடித்த உழவன் படத்திலேயே இவர் அறிமுகமாகி விட்டார். எனினும் உள்ளத்தை அள்ளித்தா இவருக்கு பெரிய புகழைக் கொடுத்தது. அழகிய லைலா பாடலில் இவரது டான்ஸ்-க்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை.
இளமை புதுமை சொர்ணமால்யாவின் இன்னொரு பக்கம் : எமோஷனல் பேட்டி
தொடர்ந்து விஜய், அஜீத், பிரசாந்த் என அப்போதைய ஹீரோக்களின் படங்களில் ஜோடியாக நடித்தார். கார்த்திக்-ரம்பா கெமிஸ்ட்ரி அப்போது சூப்பராக ஒர்க்அவுட் ஆகியது. அதன்பின் டாப் ஹீரோயின்கள் வரிசையில் இடம்பிடித்து ரஜினியுடன் அருணாச்சலம், கமலுடன் காதலா, காதலா போன்ற படங்களில் நடித்தார். காதலர் தினம் படம் படத்தில் இடம் பெற்ற ஓ மரியா பாடல் இவரை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது.
த்ரீ ரோசஸ் என்ற படத்தைத் தன் சகோதரருடன் இணைந்து தயாரித்தார். இதில் லைலா, ஜோதிகாவுடன் இணைந்து தானும் நடித்தார். படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. தொடர்ச்சியாக பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் ரம்பாவிற்கு என்னவோ அழுத்தமான கதாபாத்திரங்கள் அமையவில்லை. தமிழில் சொல்லிக் கொள்ளும் படியாக அவர் கதாபாத்திரங்கள் பேசப்படவில்லை. கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டார் என்ற குறை இருக்கிறது.
அதன்பின் தெலுங்கு, போஜ்புரி, இந்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிப்பக்கம் தாவி அங்கே நடித்து வந்தவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது ஆடல் பாடல் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பங்கேற்று வருகிறார் ரம்பா.