என்னோட உயிர், உலகமே நீங்கதான்.. கணவருக்கு அன்பு முத்தங்களுடன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நயன்தாரா…

By John A

Published:

லேடீ சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய கணவரான விக்னேஷ் சிவனின் பிறந்த நாளையொட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் விக்னேஷ்சிவனுக்கு முத்தமிட்டவாறு வாழ்த்துக் கூறி பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2015-ல் வெளியான நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது காதல் வயப்பட்டனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகவே வந்தனர். தங்களது காதலை வெளிப்படையாகவே அறிவித்து இருவரும் கடந்த 2022-ல் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் திருமணமான சில மாதங்களிலேயே வாடகைத் தாய் மூலம் இரு குழந்தைகளுக்குப் பெற்றோர்களாயினர் இத்தம்பதிகள். இவர்களின் குழந்தைக்கு உயிர், உலக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவ்வப்போது குழந்தைகளுடன் தாங்கள் இருக்கும் தருணங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நாயகன் படத்துலயே கமல் செய்த புதுமை… யாராவது இதைக் கவனிச்சீங்களா?

இந்நிலையில் துபாயில் சைமா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக துபாய் சென்றிருந்தனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும். இருவருக்குமே விருதுகள் வழங்கப்பட்டது. அன்னபூரணி படத்திற்காக நயன்தாராவிற்கும், ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே பாடலுக்காக விக்னேஷ் சிவனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

விருது விழா முடிந்தவுடன் துபாயிலேயே தங்கிருந்தனர் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். இன்று விக்னேஷ் சிவனுக்குப் பிறந்த நாள் என்பதால் நயன்தாரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் கணவர் விக்னேஷ் சிவனுக்கு என் உயிர், உலகமே நீங்கள் தான். என் அன்பை விவரிக்க இயலாது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று கேண்டில் லைட் ஒளியில் இருவரும் முத்தமிட்டவாறு இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்திருக்கிறார் நயன்தாரா.

தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தினை இயக்கி வருகிறார். இது இவர்களின் சொந்தப் படமாகும்.