கவினுக்கு ஜோடியான நயன்தாரா.. வைரலாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

By John A

Published:

தென்னிந்திய சினிமா உலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும், கவினும் ஜோடியாக நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. லேடீ சூப்பர் ஸ்டாரான நயன்தார சூப்பர் ஸ்டார் முதல் தற்போது உள்ள கவின் வரை அனைவருடனும் ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் வயது வித்தியாசம் பார்க்காமல் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ஸ்கோர் செய்வது நயன்தாராவின் ஸ்டைல். அந்த வகையில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். இதில் யோகி பாபு நயன்தாராவைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல் சிவகார்த்திகேயன் வளர்ந்து வந்த நேரத்தில் அவருடன் மிஸ்டர். லோக்கல் படத்தில் ஜோடியாக நடித்தார்.

மேலும் ரஜினி முதல் அஜீத், விஜய், ஜெயம் ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி,சிவகார்த்திகேயன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துவரும் நயன்தாரா தற்போது அடுத்த தலைமுறை ஹீரோவான கவினுடன் ஜோடியாக நடிக்க உள்ளார்.

கவினுக்கு ஜோடியான நயன்தாரா.. வைரலாகும் படத்த்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பிக்பாஸ், சரவணன் மீனாட்சி ஆகியவற்றின் மூலம் பிரபலமான கவின் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த டாடா, லிப்ட் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஸ்டார் படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்படி அடுத்தடுத்து திரையுலகில் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் கவின் தற்போது நயன்தாராவுடன் இணைய உள்ளார்.

விக்ரம், மாஸ்டர், கைதி ஆகிய படங்களில் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய விஷ்ணு எடவான் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நயன்தாராவும், கவினும் தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இதனை உறுதி செய்துள்ளனர். படத்தின் போஸ்டரில் இருவரும் நெருக்கமாக இருப்பதால் இது காதல் படமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.