எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்றும் இளமை குறையாமல் ஹீரோயின்களுக்கே சவால் விடும் 80‘s ஹீரோயின் தான் நதியா. 1984-ல் மலையாளத்தில் மோகன் லாலுடன் அறிமுகமான நதியா தனது துறுதுறு நடிப்பாலும், குடும்பப் பாங்கான தோற்றத்திலும் அன்றைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டார். தமிழில் பாசில் இயக்கிய பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையானார்.
ரஜினியுடன் ராஜாதி ராஜா, பிரபு சத்யராஜ் நடித்த சின்னத்தம்பி பெரிய தம்பி, இராஜகுமாரன் போன்ற பல முன்னணி ஹிட் படங்களில் நாயகியாக நடித்தார். நதியா சுடிதார், நதியா கம்மல் போன்றவை இன்றளவும் 80 களில் பிறந்த பெண்களின் பேவரைட் டிசைனாக உள்ளது.
இன்றும் தனது உடலை தினமும் யோகா, உடற்பயிற்சி மூலம் இளமையாக வைத்திருக்கிறார். 55 வயதைக் கடந்த பின்னரும் நதியா இன்றும் இளமையாக ஜொலிப்பது மற்ற ஹீரோயின்களே பொறாமைப்பட வைக்கிறது.
அண்மையில் நதியா பேட்டி ஒன்றில் நடிகர் அஜீத் பற்றிக் கூறியுள்ளார். அதில் நதியா மற்றும் சுரேஷ் இணைந்து நடித்த என் வீடு என் கணவர் என்ற படத்தல் அஜீத் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதில் பள்ளி மாணவராக அஜீத் சில காட்சிகளில் தோன்றியிருப்பார்.
தமிழ் சினிமா மறக்காத 16 வயதினிலே டாக்டர்.. நடிப்பில் பின்னியும் நடிகர் வாழ்வில் நிறைவேறாத ஆசை..
இந்த கேரெக்டர் பற்றி நதியாவிடம் கேட்கையில் இந்தப் பட ஷுட்டிங்-ன் போது அஜீத் யாரென்றே தெரியாது. ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து சென்றதால் அவரைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்று அவருடைய வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. மேலும் தனக்கு பகத் பாசிலை 4 வயது சிறுவன் முதல் நன்கு தெரியும் எனவும். பூவே பூச்சூடவா படத்தின் படப்பிடிப்பில் அங்குமிங்கும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருந்தார் எனவும் நதியா குறிப்பிட்டுள்ளார்.
நடிப்புக்கு முழுக்குப் போட்டு பல வருட இடைவெளிக்குப் பின் கடந்த 2004-ல் வெளியான எம்.குமரன் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நதியா தொடர்ந்து சிறந்த கதையம்சம் உள்ள படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமீப்த்தில் இவர் நடிப்பில் வெளியான தோனி தயாரிப்பில் LGM படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.