தமிழ்சினிமாவின் எவர்கிரீன் படங்களில் ஒன்றாக இருப்பது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் திரைப்படம். புரியாத புதிர் திரைப்படத்திற்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமாருக்கு இரண்டாவது படம். விஜயக்குமார்,சரத்குமார், ஆனந்த் பாபு, மஞ்சளா, கவுண்டமணி, செந்தில் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற சம்பா நாத்து பாடலும், காதல் கடிதம் வரைந்தேன் போன்ற பாடல்கள் இன்றும் எங்கோ ஓர் மூலையில் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கும். இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்தான் இயக்குநர் சேரன்.
இந்தப் பட ஷுட்டிங்கின் போது நடிகை மஞ்சுளாவிடம் சேரன் சண்டைபோட்ட சம்பவத்தை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் சேரன். சேரன் பாண்டியன் பட ஷுட்டிங்கின் போது நிஜ தம்பதிகளான விஜயக்குமாரும், மஞ்சுளாவும் திரையிலும் நிஜத் தம்பதிகளாக நடித்தனர். இப்படத்தில் அனைவருக்கும் எளிமையான காஸ்ட்டியூமே பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..
இந்நிலையில் மஞ்சுளா நடிக்கும் காட்சிகள் வரவே ஷுட்டிங்கிற்கு அம்மன் போல் நகைகள், புடவை அணிந்து வந்திருந்தார். இதனைப் பார்த்த சேரனுக்கு அதிர்ச்சி. இந்தப் படத்திற்கு இதுபோன்ற காஸ்ட்டியூம் தேவையில்லை என அவர் கூறினார். ஆனால் நடிகை மஞ்சுளா அதனைக் கேட்க மறுத்து நான் இப்படித்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சேரன் சொன்ன போது அவங்க சீனியர் ஆர்டிஸ்ட். எனவே அவங்க இருப்பது போலேவே நடிக்கட்டும் என்று கூறியிருக்கிறார். அதன்படி மஞ்சுளா வரும் காட்சிகளில் அவருக்கு மட்டும் மேக்கப் அதிகமாக இருக்கும். இந்நிலையில் படம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. படத்தினைப் பார்த்த மஞ்சுளா சேரனிடம் நீங்கள் கூறியது போல் படத்தில் அனைவரும் ஒரே மாதிரி இருக்க, நான் மட்டும் தனித்துத் தெரிகிறேன். அன்று நீங்கள் கூறியதை ஏற்கவில்லை மன்னிக்கவும் என வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் விஜயக்குமாரும் அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் கூறுவதைக் கேட்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.
இதனால் விஜயக்குமார் மீது சேரனுக்கு தனி மரியாதை ஏற்பட்டது. மேலும் கே.எஸ்.ரவிக்குமாரின் அடுத்தடுத்த படங்களில் விஜயக்குமார் தொடர்ந்து நடித்ததால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் சேரனுக்குக் கிடைத்தது. இதனால் தான் தனது முதல்படமான பாரதி கண்ணம்மாவில் அவரை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் சேரன்.