திவ்யபாரதி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் மாடலாக பணிபுரிந்து வந்த திவ்யபாரதி பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தார். அதற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2017 ஆம் ஆண்டு முப்பரிமாணம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் திவ்யபாரதி. 2021 ஆம் ஆண்டு இளங்கலை என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக ஜி வி பிரகாஷ் நடித்த பாச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் திவ்ய பாரதி.
பின்னர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக குறைந்த காட்சிகளில் தோன்றியிருப்பார் திவ்யபாரதி. தற்போது மறுபடியும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் திவ்யபாரதி.
பாச்சுலர் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார் திவ்யபாரதி. அதனால் ஜிவி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் விவாகரத்து பெற்று பிரிந்ததற்கு திவ்ய பாரதி தான் காரணம். அவர்கள் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று பல பேச்சுக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. இதைப் பற்றி தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் திவ்யபாரதி.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் திவ்யபாரதி ஜிவி பிரகாஷுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களது பர்சனலான விஷயங்களில் என்னை இழுத்து பேசுவது சரியில்லை. நான் முதலில் எந்த ஒரு நடிகருடனும் டேட்டிங் செய்ததில்லை. அதுவும் திருமணமான ஒரு ஆணுடன் நான் டேட்டிங் எந்த காலத்திலும் செய்ய மாட்டேன். அவர்களது சொந்த விஷயத்தில் என்னை இனிமேல் எதற்கும் சம்பந்தப்படுத்தி பேசாதீர்கள். இதுவே எனது முதலும் கடைசியுமான பதிவு என்று விளக்கம் அளித்து இருக்கிறார் திவ்யபாரதி.