தமிழ் சினிமாவில் 80, 90களை ஆட்டிப்படைத்த ஹீரோயின்கள் ஸ்ரீபிரியா, ராதா, ராதிகா, அம்பிகா, ரேவதி, குஷ்பூ, பானுப்பிரியா, சுகாசினி போன்றோர்கள். ஒவ்வொருவரும் தங்களது திறமையால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடிக்கொண்டிருந்த காலகட்டங்கள் அது. இதில் குறிப்பிடத்தகுந்தவர் பானுப்பிரயா. தனது அபார நடிப்பாற்றலாலும், பரதத்தில் அசத்தியும் 90-களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.
சத்ரியன் படத்தில் இடம்பெற்ற மாலையில் யாரோ மனதோடு பேச… என்ற மெலடி பாடலால் ரசிகர்ளை முனுமுனுக்க வைத்தவர். இன்றுவிடிய விடிய வீடியோகால், சாட்டிங் என காதலில் திளைத்துக் கொண்டிருக்கும் காதலர்களுக்கு முன்னோடியாக விளங்கிய சங்கீத ஸ்வரங்கள் என்ற பாடல் மூலம் 90‘s கிட்ஸ் காதலர்களிடம் பிரபலமாக இருந்தவர் பானுப்பிரியா. மேலும் கோகுலம் படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தத்தை உருவாக்கியவர் இவரா..? தந்தையாகவும், ஆசானாகவும் விளங்கிய பெரியவர்
தன்னுடைய 17 வயதில் 1983-ல் தமிழில் மெல்லப் பேசுங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1995-களுக்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இன்றுவரை தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் பானுப்பிரியா தற்போது ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வருகிறாராம்.
இவருக்கு விவாகரத்தாகிவிட்டது என்று செய்திகள் உலா வந்த நிலையில் தனது கணவர்பற்றிக் கூறிய பானுப்பிரியா எனக்கும் எனது கணவருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது கணவரும் தற்போது உயிருடன் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எனது உடல்நிலைபற்றி வந்த செய்திகள் எதுவும் உண்மையில்லை. மேலும் தற்போது சில படங்களில் நடித்து வருவதாகவும், ஆனால் திடீரென ஞாபக மறதியால் டயலாக்குகள் மறந்து போவதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது முழுநேரமும் வீட்டிலேயே இருப்பதாகவும், புத்தகம் படிப்பது, பாடல்களைக் கேட்பது, வீட்டு வேலைகளை செய்வது என தன்னை பிசியாக வைத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது ஒரே மகளான அபிநயா, தற்போது லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் பானுப்ரியா கூறியுள்ளார்.