இந்தப் படமெல்லாம் சீயான் விக்ரமுக்கு வந்த படங்களா? ஆரம்ப காலத்தில் நிழலாகத் தொடர்ந்த அமீர் சொன்ன தகவல்..

தமிழ் சினிமாவில் 10 வருட போராட்டத்திற்குப் பின் சேது படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்து இன்று இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார் நடிகர் விக்ரம். சேது திரைப்படத்தில் இயக்குநர் பாலாவிடம்…

Director Ameer

தமிழ் சினிமாவில் 10 வருட போராட்டத்திற்குப் பின் சேது படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்து இன்று இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார் நடிகர் விக்ரம். சேது திரைப்படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர்தான் அமீர். அப்போதிருந்தே விக்ரமுக்கும், அமீருக்கும் நல்ல நட்பு இருந்திருக்கிறது. இந்நிலையில் அமீர் சேது படம் வெளியான புதிதில் அந்தப் படத்தின் வெற்றியைப் பார்த்து தான் இயக்கும் முதல் படத்தில் விக்ரமை நடிக்க வைக்க அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.

அதன்பின் விக்ரம் சேதுவுக்குப் பிறகு தனக்காக கதை கேட்க, சம்பளம் பேச அமீரை நியமித்திருக்கிறார். அமீரும் பல இயக்குநர்களிடம் கதை கேட்டிருக்கிறார். இதில் ஒன்று தான் காக்கா காக்க திரைப்படம். மின்னலே படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் காக்க காக்க கதையை முதலில் விக்ரமிடம் தான் கூறியிருக்கிறார். அப்படத்தின் கதையை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கௌதம் மேனன் கூறியிருக்கிறார். ஆனால் ஆங்கில மொழிப் புலமை அமீரிடம் போதுமானதாக இல்லாததால் அந்தக் கதையை விக்ரமுக்காக அவர் கேட்காமல் விக்ரமே கேட்டிருக்கிறார்.

டாப் 10 இந்தியன் மூவிஸ் 2024.. முதலிடத்தை பிடித்த தமிழ் படம்.. டாப் 5 லயே மூணு தமிழ் படம் இருக்கே..

இருப்பினும் விக்ரம் சின்ன சின்ன நெருடல்கள் காரணமாக அந்தக் கதையை நிராகரித்திருக்கிறார். அதன்பின்தான் இந்தப் படம் சூர்யாவுக்குச் சென்றது. இதனையடுத்து கே.பாக்யராஜ், இயக்குநர் அகத்தியன் ஆகியோரிடமும் அமீர் விக்ரமுக்காக கதை கேட்டிருக்கிறார். ஆனால் அமீர் தான் கதை கேட்டது என இப்போதுதான் அவர்களுக்கே தெரிந்திருக்கும்.

ஏனெனில் அப்போது அமீர் எந்தப் படத்தினையும் இயக்கவில்லை. இந்நிலையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் பட வாய்ப்பும் வந்திருக்கிறது. அந்தக் கதை விக்ரமுக்குப் பிடித்துப் போயிருக்கிறது. சரத்குமாருடன் நடிப்பு, ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பு என ஆவலாக இருந்ததால் அந்தக் கதையில் நடித்தார் விக்ரம். ஆனால் இதை அமீர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

சில நாட்கள் சென்ற பிறகு வண்ணத்திரை இதழில் விக்ரமின் பட வாய்ப்புகளை அமீர் கெடுக்கிறார் என்ற தொணியில் துணுக்கு வர அதன்பின் விக்ரமிடம் கூறி அவரிடமிந்து விலகியிருக்கிறார் அமீர். மேலும் தான் அவருக்கு முதன் முதலாக அட்வான்ஸ் கொடுத்து புக் செய்த மௌம் பேசியதே படத்தினையும் சூர்யாவை வைத்து இயக்கினார் அமீர்.